கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்! தகர்ந்தது உக்ரைன் கனவு
ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைவதற்கான உக்ரைனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விடுத்திருந்து கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், திங்கட்கிழமை அன்று முறைப்படி உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முறைப்படி கோரிக்கை விடுக்கும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.
இதற்காக சிறப்பு நடைமுறையை முன்னெடுக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலில், மற்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கவும், வலுவான நிலைப்பாட்டை எடுக்கவும் இது உதவும் என்று கூறினார்.
இந்நிலையில், மொத்தம் 27 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில், பல நாடுகள உக்ரைனை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உக்ரைனின் உறுப்புரிமைக்கு ஆறுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், ஜேர்மனியும் பிரான்சும் உடனடியாக அவ்வாறு செய்ய முடியாது என்று கூறியுள்ளன.
உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்ததன் பின்னணியில் நீண்ட நடைமுறைகள் இருப்பதாக குழுவில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.