ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைன், மால்டோவா - அதிகாரப்பூர்வ செயல்முறை தொடக்கம்
ஐரோப்பிய ஒன்றியம் (EU), உக்ரைன் மற்றும் மால்டோவாவை உறுப்பினர்களாக சேர்க்கும் அதிகாரப்பூர்வ செயல்முறையை 2026 ஜூன் 15 அன்று தொடங்கியுள்ளது.
லக்சம்பர்க் நகரில் நடைபெற்ற மாநாட்டில், உக்ரைன் துணைப் பிரதமர் தாராஸ் கச்கா, “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஐரோப்பாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. அதனால் விரைவான இணைப்பு நமக்கு அவசியம்” எனக் கூறினார்.

இந்த செயல்முறையில், வேளாண்மை, வரி, ஆற்றல், வர்த்தகம் உள்ளிட்ட 35 கொள்கை பிரிவுகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்.
ஆரம்ப கட்டமாக, நீதித்துறை, அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, பொது கொள்முதல், புள்ளிவிவரங்கள் மற்றும் நிதி கட்டுப்பாடு ஆகிய 5 முக்கிய பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
EU வெளியுறவு கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், “இரு நாடுகளும் கடினமான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. அவர்களின் உறுப்பினர் சேர்க்கை ஐரோப்பாவை வலுப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள், உக்ரைனை விரைவாக இணைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. ஆனால், EU அதிகாரிகள், “இது முழுமையான உறுப்பினர் சேர்க்கை நோக்கத்துடன், திறமை அடிப்படையில் நடைபெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
மால்டோவாவை தனது செல்வாக்கில் வைத்திருக்க ரஷ்யா தவறான தகவல் பிரச்சாரங்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |