ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக முடக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம்

European Union Russian Federation
By Arbin Feb 08, 2026 05:19 AM GMT
Report

ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு சேவைகளுக்கும் விரிவான தடை விதிக்குமாறு ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது.

முற்றுப்புள்ளி வைக்கும்

உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யாவின் முக்கிய வருமான ஆதாரத்தை மொத்தமாக முடக்கும் முயற்சியில், இதுவரையிலான ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் அனைத்திற்குமான கூட்டு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக முடக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம் | Eu Targets Russian Crude

மேற்கத்திய கப்பல் சேவைகளின் உதவியுடன், ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானதை ஐரோப்பிய எண்ணெய் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறது; இதில் பெரும்பாலானவை கிரீஸ், சைப்ரஸ் மற்றும் மால்டா நாடுகளைச் சேர்ந்தவை.

ஆனால், தற்போது ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ள இந்தத் தடை, பெரும்பாலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் விநியோகம் செய்யப்படும் அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

மேலும், மேற்கத்திய நாடுகளின் ஜி7 கூட்டமைப்பு அமுல்படுத்த முயற்சித்த ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான விலை வரம்பையும் இது பயனற்றதாக்கிவிடும்.

எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்... பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி

எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்... பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் இந்தத் தடை குறித்து விவாதித்து வருவதாக டிசம்பர் மாதத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முதன்முதலில் செய்தி வெளியிட்டது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தத் தடை எவ்வாறு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றோ, அல்லது அதன் விலை வரம்பு வேறுபட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போன்ற பிற எரிசக்தி ஏற்றுமதிகளையும் பின்னர் இது உள்ளடக்குமா என்றோ குறிப்பிடவில்லை.

ஆனால், இந்தத் தடை ஒரே எண்ணம் கொண்ட நேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு கப்பல்கள் மற்றும் பனி உடைக்கும் கப்பல்கள் பராமரிப்பு மற்றும் பிற சேவைகளும் விரிவான தடைகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக முடக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம் | Eu Targets Russian Crude

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து விதிக்கப்படும் 20வது தடைகள் தொகுப்பு இதுவாகும். ரஷ்யாவை தீவிர அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தள்ளுவதே இதன் நோக்கம் என்று வான் டெர் லேயன் கூறியுள்ளார்.

மொத்த எண்ணிக்கை 640

இந்தத் தொகுப்பில், இதுவரை தடைகளுக்கு உட்படாத உலோகங்கள், இரசாயனங்கள் மற்றும் முக்கிய கனிமங்கள் மீதான புதிய இறக்குமதித் தடை மற்றும் ரஷ்யாவிற்குச் செய்யப்படும் ஐரோப்பிய ஏற்றுமதிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவையும் அடங்கும் என்று வான் டெர் லேயன் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணையம், ரஷ்யாவின் ரகசியக் கப்பல் படையில் உள்ள மேலும் 43 கப்பல்களைத் தனது தடைகள் பட்டியலில் சேர்க்கவும், அதன் மூலம் மொத்த எண்ணிக்கையை 640 ஆக உயர்த்தவும், அத்துடன் மேலும் 20 ரஷ்ய பிராந்திய வங்கிகளைச் சேர்க்கவும் முன்மொழிந்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக முடக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம் | Eu Targets Russian Crude

அத்துடன் மேற்கத்தியத் தடைகளை ரஷ்யா தவிர்ப்பதற்கு உதவும் கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகளையும் அது முன்மொழிந்துள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரங்களின்படி, இந்தத் தொகுப்பு மொத்தம் 100-க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பயண மற்றும் பரிவர்த்தனைத் தடைகளையும், சொத்து முடக்கங்களையும் விதிக்கும் என்றே தெரிய வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US