ரஷ்யர்களுக்கான விசா விதிகளில் கிடுக்குப்பிடி: ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை
ரஷ்ய குடிமக்களுக்கான விசா விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக்கி உள்ளது.
கடுமையாகும் விசா விதிகள்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை காரணமாக ரஷ்ய குடிமக்களுக்கான விசா விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையானதாக மாற்றியுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் மூலம் ரஷ்ய குடிமக்கள் இனி பலமுறை ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைய முடியாது, அதாவது பலமுறை நுழைவதற்கான விசாவை பெற முடியாது.

இதனால், ரஷ்ய குடிமக்கள் இனி ஒவ்வொரு முறையும் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் போது புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, விசா விண்ணப்பமும் தீவிரமான பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.
விதிவிலக்கு
தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், சில குழுக்களுக்கு இந்த விசா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விசா கட்டுப்பாடு குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தையும், அதன் குடிமக்களையும் பாதுகாப்பது எங்கள் கடமை என குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக நடமாடுவது சலுகை மட்டுமே, அது உரிமை இல்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |