உக்ரைனில் மோதல் பதற்றம் மேலும் அதிகரித்தால் இது தான் கதி! ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை
உக்ரைனில் மோதல் பதற்றம் மேலும் அதிகரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அகதிகளின் பெரும் நகர்வை தூண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் Margaritis Schinas எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் Margaritis Schinas கூறியதாவது, உக்ரைனில் மோதல் பதற்றம் மேலும் அதிகரித்தால் ஐரோப்பிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குவது மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அகதிகளின் பெரும் நகர்வை தூண்டும் என்று எச்சரித்துள்ளார்.
20,000 முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் வரலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அழுத்தம் கொடுக்க அகதிகள் பயன்படுத்தப்படலாம் என்றும் Schinas எச்சரித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனில் இருந்து அகதிகள் வரக்கூடும் என்பதால் அவசரகால தங்குமிடத்தை தயார் செய்யுமாறு போலந்து அமைச்சர்கள் பிராந்திய தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு கிரிமியா மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கிழக்கில் நடந்த போரால் ஏற்கனவே 1.5 மில்லியன் உக்ரேனியர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.