ஐரோப்பியாவில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாக்க இதை தடை செய்ய வேண்டும்! EDPS
கண்காணிப்பு கருவியான பெகாசஸை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேலை தளமாக கொண்ட NSO குழு உருவாக்கிய சர்ச்சைக்குரிய பெகாசஸ் உளவு மென்பொருளை தடை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு காண்காணிப்பு அமைப்பான EDPS அழைப்பு விடுத்துள்ளது.
பெகாசஸின் பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு ஊடுருவும் தன்மைக்கு வழிவகுக்கும், நமது அன்றாட வாழ்க்கையின் மிக நெருக்கமான அம்சங்களில் தலையிட முடியும் என்று EDPS கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பெகாசஸின் திறன் கொண்ட ஸ்பைவேரை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுவது, நமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழியாக இருக்கும் என்று EDPS கூறியது.
பெகாசஸ் போன்ற மென்பொருள் கருவிகள் பற்றிய விவாதத்தின் மத்தியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மட்டும் அல்ல, தனியுரிமைக்கான உரிமைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் இருக்க வேண்டும் என EDPS குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை உளவு பார்ப்பதற்காக சில வெளிநாட்டு அரசாங்கங்களால் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேல் உலகளாவிய அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது.
அரசாங்களுக்கு ஒரு முறை விற்ற பெகாசஸ் மென்பொருளை இயக்காவோ அல்லது அந்த அமைப்பின் செயல்பாட்டில் எந்த வகையிலும் ஈடுபடவோ இல்லை என்று NSO குழு கூறியுள்ளது.