யூரோ கிண்ணம்: முதலாவதாக தொடரில் இருந்து வெளியேறும் அணி
ஜேர்மனியில் நடந்துவரும் யூரோ கிண்ணம் 2024ல் முதலாவதாக வெளியேறும் அணியாக போலந்து மாறியுள்ளது.
ஒற்றை கோல் பதிவு
பிரான்ஸ் அணியுடனான போட்டியில் 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்த நிலையில், போலந்து அணி, யூரோ கிண்ணம் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரியாவுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணி வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது. ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் Krzysztof Piatek என்பவர் மட்டுமே ஒற்றை கோல் பதிவு செய்து நம்பிக்கை அளித்தார்.
மோசமான தொடக்கம்
ஆனால் Christoph Baumgartner மற்றும் Marko Arnautovic ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிவாகை சூடியது.
தற்போது நெதர்லாந்து அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தினால் மட்டுமே போலந்துக்கு இந்த தொடரில் நீடிக்கும் வாய்ப்பு அமையும். 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்த பின்னர் போலந்து அணியின் தலைவர் Probierz தெரிவிக்கையில், மோசமான தொடக்கம் மட்டுமல்ல, அதிக வாய்ப்புகளையும் தவற விட்டோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |