யூரோ கால்பந்து! ஜேர்மனியின் தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத குழந்தை! கமெராவில் சிக்கிய புகைப்படம்
யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேர்மனி தோல்வியடைந்ததால், குழந்தை ஒருவர் கண்கலங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து-ஜேர்மனி அணிகள் மோதின. இப்போட்டி இங்கிலாந்தில் இருக்கும் விம்பிலியில் நடைபெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை மைதானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, ஜேர்மனியின் தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
அப்போது அவர் அருகில் இருந்த நபர் அவரை கட்டியணைத்து தேற்றினார். இருப்பினும், அக்குழந்தை இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கினார்.
Love to see fans celebrating themselves being on the big screen? #ENGGER #eng pic.twitter.com/Mumc8C6nIn
— Tommy (@_tommy2001) June 29, 2021
அதுமட்டுமின்றி இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றதால், போட்டியை நேரில் காண இளவரசர் வில்லியம் தன் குடும்பத்தோடு வந்திருந்தார்.
அப்போது இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்த போது அவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இங்கிலாந்தின் இந்த வெற்றியை, பிரித்தானியாவின் பல பகுதிகளில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது
Imagine if #ENG win the whole thing.. pic.twitter.com/KwCtHsmuvE
— Roberto Rojas (@RobertoRojas97) June 29, 2021