Euro 2024 கால்பந்து தொடர்: சூப்பர் 16 சுற்றில் இங்கிலாந்து அபார வெற்றி!
Euro 2024 கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னிலை பெற்ற ஸ்லோவாக்கியா
Euro 2024 கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் இங்கிலாந்து மற்றும் ஸ்லோவாக்கியா அணிகள் இன்று மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் 25வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா அணி வீரர் இவன் ஸ்க்ரான்ஸ் கோல் அடித்து அமர்களப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து முதல் பாதியில் ஸ்லோவாக்கியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
எழுச்சி பெற்ற இங்கிலாந்து அணி
இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது.
ஆனால் தொடர்ந்து தடுப்பாட்டத்தை ஸ்லோவாக்கியா அணி திறம்பட செய்து வந்தது.
இருப்பினும் ஆட்டத்தின் கடைசி 90 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் பெல்லிங்ஹாம் கோல் அடித்து அசத்தினார்.
இதனால் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
மேலும் கூடுதலாக 5 நிமிடம் போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் ஹரி கேன் மற்றொரு கோல் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் 16 சுற்றில் ஸ்லோவாக்கியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |