Euro 2024-ன் கால்பந்து தொடர்: இத்தாலியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அபார வெற்றி
Euro 2024-ன் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணியை 0-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து - இத்தாலி
Euro 2024-ன் கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து - இத்தாலி அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடினார்.
Italy lined up for the start of the second half in bizarre fashion.
— The Athletic | Football (@TheAthleticFC) June 29, 2024
And 27 seconds later, their #Euro2024 hopes were effectively over.
Dissecting the worst kick-off routine at the tournament so far...
? @charliefscott
? https://t.co/q62OgTg6Fq pic.twitter.com/QFoiH1FHzS
இதையடுத்து ஆட்டத்தின் 37 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ரெமோ ஃப்ரீலர் முதல் கோலை அடித்து கணக்கினை தொடங்கினார்.
சுவிட்சர்லாந்து அசத்தல்
இரண்டாவது பாதியில் மேலும் வேகமெடுத்த சுவிட்சர்லாந்து அணி 46 வது நிமிடத்தில் 2வது கோலை அடித்து அசத்தியது.
இந்த கோலை சுவிட்சர்லாந்து அணியில் ரூபன் வர்காஸ் அடித்தார்.
சுவிட்சர்லாந்து அணியின் கோல் கணக்கை சமன் செய்ய இத்தாலி கடுமையாக போராடியது.
Switzerland advance to the quarterfinals with a commanding 2️⃣-0️⃣ victory over Italy ?#SonySportsNetwork #EURO2024 | @EURO2024 pic.twitter.com/eLPjdFRrzY
— Sony Sports Network (@SonySportsNetwk) June 29, 2024
ஆனால் ஆட்ட நேர முடிவு வரை இத்தாலி அணியால் கோல் கணக்கை சமன் செய்ய முடியவில்லை.
இதன் மூலம் euro 2024-ன் கால்பந்து தொடரில் இத்தாலிக்கு எதிரான சூப்பர் 16 சுற்றில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
What a year Granit Xhaka's having ? pic.twitter.com/L7uyX9gdDJ
— B/R Football (@brfootball) June 29, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |