லொட்டரியில் ரூ.6500 கோடி ஜாக்பாட் வென்ற பிரித்தானியர்
யூரோமில்லியன்ஸ் (EuroMillions) லொட்டரியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.6500 கோடி (இலங்கை பணமதிப்பில்) ஜாக்பாட் அடித்துள்ளது.
பிரித்தானியாவில் ஒருவருக்கு EuroMillions லொட்டரி சீட்டுக்கு 177 மில்லியன் பவுண்ட் பரிசு கிடைத்துள்ளது. இது இளநகை பணமதிப்பில் சுமார் ரூ. 65,477,860,945 ஆகும்.
இது National Lottery வரலாற்றில் வென்ற மூன்றாவது பாரிய தொகையாகும்.
இந்த பரிசை வென்ற நபர் தன்னுடைய அடையாளத்தை அறிவிக்க மறுத்து, நவம்பர் 26 அன்று நடந்த டிரா பிறகு பரிசை பெறுவதற்காக முன்வந்தார்.
Allwyn என்ற தேசிய லொட்டரி நிறுவனத்தின் தகவலின் படி, பரிசு பெற்ற நபருக்கு £177,033,699.20 வழங்கப்பட்டு விட்டது.
இந்த வெற்றியின் மூலம், அந்த நபர் பிரித்தானிய பாடகி Dua Lipa (£104 மில்லியன்) மற்றும் Michael Buble (£63 மில்லியன்) ஆகியோரைவிட பாரிய பணக்காரராக மாறியுள்ளார்.
இந்த ஜேக்பாட் ஒருவரின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடும். இந்த அளவுக்கு பெரிய பணத்தால் செய்யமுடியாது என்று எதுவும் இருக்காது. அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு இந்த பரிசு கிடைத்திருப்பது சிறப்பு என Allwyn நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஆண்டி கார்டர் கூறியுள்ளார்.
2022 ஜூலை 19 அன்று மற்றொரு பிரித்தானிய நபர் £195 மில்லியன் ஜேக்பாட் வென்றிருந்தார். அதே போல், 2022 மே 10 அன்று, ஜோ மற்றும் ஜெஸ் த்வைட் ஆகியோர் £184 மில்லியன் பரிசை வென்றனர்.
இந்த வெற்றியுடன், புதிய ஜேக்பாட் வென்ற நபர் பிரித்தானிய தேசிய லொட்டரி வரலாற்றில் மூன்றாவது பாரிய வெற்றியாளராக இடம்பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |