கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் ஐரோப்பா: கூறப்படும் ஒற்றைக் காரணம்
ரஷ்யா முற்றிலுமாக விநியோகத்தை நிறுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் காரணமாக ஐரோப்பா பொருளாதார மந்தநிலையின் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய பொருளாதாரமானது சிக்கலை எதிர்கொள்ள முதன்மை காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெருமளவில் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி தற்போதைய உக்ரைன் விவகாரம் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா இன்னும் அதன் எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் எரிவாயு விநியோகத்தை குறைப்பதன் மூலம் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
மேலும், தினசரி உற்பத்தியை 5 மில்லியன் பீப்பாயாக ரஷ்யா குறைத்தால், பீப்பாய் ஒன்றின் விலை 380 டொலர் என அதிகரிக்கும் அபாயம் அதிகம் என்றே கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்பட்ட ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111 டொலர் என இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடியாக மொத்த விநியோகத்தையும் நிறுத்தினால் கடும் சிக்கல் தான் என நிபுணர்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, பராமரிப்பு பணிகள் என கூறிக்கொண்டு ஜூலை 11ம் திகதி முதல் 10 நாட்களுக்கு விநியோகம் முடக்கப்படும் என்ற தகவலும் ஜேர்மனிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.