காட்டுத்தீ, வறட்சி, புயல்., வெப்ப அலை குறைந்தாலும் ஐரோப்பாவிற்கு தொடரும் ஆபத்துகள்
ஐரோப்பாவில் சமீபத்திய வெப்ப அலை குறைந்தாலும், காட்டுத்தீ, வறட்சி மற்றும் புயல் தாக்கங்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்துகின்றன.
ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, சான் பிரான்சிஸ்கோ நகரின் பரப்பளவுக்கு இணையான பகுதியை எரித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 30 விமானங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
பிரான்சில், மே மாத இறுதியிலிருந்து வறட்சி மோசமடைந்தது. மத்திய தரைக்கடலின் அதிக வெப்பம் காரணமாக, தெற்கு பிரான்சில் உள்ள எரிவாயு மின் நிலையம் மூடப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜேர்மனியில், ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்ததால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புயல் தாக்கம் காரணமாக பிரான்சில் இரண்டு பேர், ஜேர்மனியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். ஸ்டுட்கார்ட் அருகே 'supercell' புயல் தாக்கத்தால், 5 செ.மீ. அளவிலான ஆலங்கட்டி மழை பெய்தது.

ஸ்பெயினின் அரகோன் பகுதியில் 12,000 ஹெக்டேருக்கும் மேற்பட்ட காடு எரிந்துள்ளது. வீடுகள் காப்பாற்றப்பட்டன, மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், விலை நிலம் அனைத்தும் எரிந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீஸின் அத்தென்ஸ் நகரில், காட்டுத்தீ அபாயம் அதிகரித்ததால், ட்ரோன்கள் மற்றும் நீர்த்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் (WHO), “ஐரோப்பாவில் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன” என்று எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |