ஐரோப்பா சிதைந்துபோனது மற்றும் பலவீனமானது! நேச நாடுகளை கடுமையாக விமர்சித்த டிரம்ப்
ஐரோப்பாவை “சிதைந்துபோனவை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
ஐரோப்பாவை சாடிய டொனால்ட் டிரம்ப்
செவ்வாய்க்கிழமை வெளியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நேர்காணல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், குடியேற்றம் மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பிலான ஐரோப்பாவின் அணுகுமுறை ஆகியவற்றை டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் இந்த கருத்துகள் அமெரிக்காவின் நீண்ட நாள் நட்பு நாடுகளான பல ஐரோப்பிய நாடுகளுடனான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஐரோப்பா சிதைந்துபோவை!
பொலிடிக்கோ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சிதைந்து போனவை மற்றும் பலவீனமானவை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்றாலும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
மேலும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யாவின் கை தான் மேலோங்கி இருப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |