கைகோர்த்த ஃபோர்டு மற்றும் ரெனால்ட்: ஐரோப்பாவில் மின்சார கார் உற்பத்தியை தீவிரப்படுத்த திட்டம்
பிரபல கார் நிறுவனங்களான ஃபோர்டு மற்றும் ரெனால்ட் இணைந்து ஐரோப்பாவிற்கான மின்சார வாகன தயாரிப்பில் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
கைகோர்த்த ஃபோர்டு மற்றும் ரெனால்ட்
ஐரோப்பிய வாகன சந்தையில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக, ஃபோர்டு மோட்டார் நிறுவனமும்(Ford Motor Company) ரெனால்ட் குழுமமும்(Renault Group) இணைந்து மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளன.

இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பாவிற்கான மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து கவனம் செலுத்தும்.
செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகின் இரண்டு பெரிய கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மின்மயமாக்கல் செய்ய விரைவதை பார்க்க முடிகிறது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த ஒப்பந்தத்தின் படி, போர்டு நிறுவனத்தின் இரண்டு மின்சார கார்களை ரெனால்ட் நிறுவனம் பிரான்சில் தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் ரெனால்டின் ஆம்பிளர் தளத்தை(சிறப்பு EV) பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெரு நிறுவனங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாடல் 2028 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |