பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை
Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.
600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும்
ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரித்துள்ளது.

ECB தலைவர் கிரிஸ்டின் லகார்ட், ஐரோப்பாவில் தற்போதைய தரவு மைய திறன் தேவைக்கு போதவில்லை. 2025-ல் 3 GW-ஆக இருந்த திறன், 2036-ல் 20 GW-ஆக அதிகரிக்கும் என்று கூறயுள்ளார்.
ஐரோப்பிய நிறுவனங்கள் 2026-ல் தங்களின் மொத்த முதலீட்டில் 10 சதவீதத்தை AI-க்கு செலவிட உள்ளன. மேலும், AI தொடர்பான கடன், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய கடன்களில் 25 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தற்போது AI பயன்படுத்துகின்றனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவை விட இரட்டிப்பு மடங்காகும். AI பயன்பாடு உற்பத்தித் திறனை அடுத்த பத்து ஆண்டுகளில் 4 சதவீதம் வரை உயர்த்தும் என ECB கணித்துள்ளது.
ஆனால், IMF விடுத்துள்ள எச்சரிக்கையில், AI-யின் நன்மைகள் மற்றும் செலவுகள் நாடுகள், பிராந்தியங்கள், தொழிலாளர்கள் இடையே சமமாகப் பகிரப்படாது என கூறியுள்ளது. தொழிலாளர்கள் சிலர் உற்பத்தி திறனை உயர்த்தினாலும், சிலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஐரோப்பா, AI திறனில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட பின்தங்கியுள்ளது. 2025-ல் அமெரிக்கா 59 முக்கிய AI மாதிரிகளை உருவாக்கிய நிலையில், சீனா 35 உருவாக்கியது. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலா ஒன்றையே உருவாக்கின. உலகளாவிய AI கணினி திறனில் அமெரிக்கா 75 சதவீதத்தை வைத்திருக்க, ஐரோப்பா வெறும் 5 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
இதனை சமாளிக்க, ஐரோப்பிய ஆணையம் 7 AI Gigafactories அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 பில்லியன் யூரோ அரசு நிதி மற்றும் 20 பில்லியன் யூரோ தனியார் முதலீடு ஈர்க்கப்படும். AI விரிவாக்கம், மின்சார உள்கட்டமைப்புக்கும் சவாலாக உள்ளது. தற்போது தரவு மையங்கள் ஐரோப்பாவின் மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் பங்காற்றுகின்றன. இது விரைவில் அதிகரிக்கும் என IMF எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |