4 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி விலக்கு., ஐரோப்பிய நாடொன்றில் அறிவிப்பு
உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில நாடுகளில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது.
அத்தகைய நாடுகளில் ஒன்று தான் ஐரோப்பிய நாடான ஹங்கேரி (Hungary).
திருமணங்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban) புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று அவர் அறிவித்தார்.
மக்கள் தொகையை அதிகரிக்க புலம்பெயர்ந்தோரை அழைக்க வேண்டும் என பல்வேறு யோசனைகளை கூறியுள்ளனர்.
குறைந்தபட்சம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு வருமான வரியில் வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும்.
பாரிய குடும்பங்களுக்கு பாரிய கார்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
குழந்தைகளை வளர்ப்பதற்காக நாடு முழுவதும் 21,000 குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும், என பல சலுகைகளை ஹங்கேரி பிரதமர் அறிவித்துள்ளார்.
திருமணம் மற்றும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஹங்கேரிய அரசாங்கம் 2019-இல் மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
அத்திட்டத்தின் கீழ், 41 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு 10 million forints (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.82 லட்சம்) வரை மானியத்தில் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
European country, Hungary, No income tax