உக்ரைனுக்கு பிரித்தானியா ராணுவத்தை அனுப்பும் விவகாரம்: மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பத் தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் சொல்வதுபோல பிரித்தானியா முதலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்புமானால், அது மூன்றாம் உலகப்போரில் சென்று முடியலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என ட்ரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் விவகாரம் உலக அரசியலாகியுள்ளது. ஒரு பக்கம் அமெரிக்காவும் ரஷ்யாவும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன.
வேடிக்கை என்னவென்றால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை.
அதாவது, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை புறக்கணிக்க அல்லது அலட்சியப்படுத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளதுபோல் தெரிகிறது.
இன்னொருபக்கம், பிரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்குவது தொடர்பில் திட்டமிட்டுவருகின்றன.
அதைத் தொடர்ந்து, உக்ரைனில் அமைதியை உருவாக்குவதற்காக, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், பிரித்தானிய ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படி ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்புமானால், அது மூன்றாம் உலகப்போரில்தான் போய் முடியும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |