வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள புடின்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வெற்றி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக சீனா, இந்தியா, பிரேசில், ஸ்லோவேகியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் புடின்.
ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
மே மாதம் 9ஆம் திகதி, மாஸ்கோவில் இந்த வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய மூத்த தூதரக அதிகாரியான காயா கல்லாஸ் (Kaja Kallas), ரஷ்யாவின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பது தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ரஷ்யா, ஐரோப்பா மீது முழுவீச்சில் போர் தொடுத்துள்ளது என்று கூறியுள்ள அவர், அப்படியிருக்கும் பட்சத்தில், ரஷ்யாவின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது சரியாக இருக்காது.
அதற்கு பதிலாக, அதே நாளில் உக்ரைனில் ஒன்று திரண்டு ரஷ்யாவுக்கு போட்டியாக விழா ஒன்றைக் கொண்டாடி நாம் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும் என்று கூறியுள்ளார் காயா.
இதற்கிடையில், இப்படி காயா அதிரடியாக பேசும் விடயம், ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்களுக்குள்ளேயே கருத்துவேறுபாடுகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |