சுவிஸ் நாட்டவருக்கு ஐரோப்பிய கைது வாரண்ட்: அவர் செய்த குற்றம்
சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது செயலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாடொன்று குற்றம் சாட்டியதன் பேரிலேயே அவர் பெயரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டவருக்கு ஐரோப்பிய கைது வாரண்ட்
செப்டம்பர் 30ஆம் திகதி முதல், ஆஸ்திரியா நாட்டிலுள்ள பல ரயில் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு 27 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சுமார் 450 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.
ஆஸ்திரிய அதிகாரிகளின் விசாரணைகளில், வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் சுவிட்சர்லாந்திலிருந்து வந்துள்ளது தெரியவந்தது.
மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர் ஒரு 22 வயது சுவிஸ் இளைஞர் என தெரியவந்ததையடுத்து, சுவிஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் இன்னமும் சிக்காத நிலையில், அவரைக் கைது செய்ய ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |