மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தம்: ஐரோப்பிய நிறுவனங்கள் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை ஐரோப்பிய நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
விமான சேவைகள் ரத்து
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் மற்றும் மத்திய கிழக்கில் பரவி வரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக ஐரோப்பாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
இந்த பிராந்தியங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரத்து நடவடிக்கையை ஏர் பிரான்ஸ், KLM மற்றும் Lufthansa group ஆகியவை அறிவித்துள்ளன.
இந்த ஏர் நிறுவனங்கள், டெல் அவிவ், துபாய், சவுதி அரேபியா ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை இந்த வார இறுதி வரை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக இடர் மேலாண்மை அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |