உக்ரைனுக்கு நிதியை வாரி வழங்கும் முதலீட்டு வங்கி: ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!
ஐரோப்பிய முதலீட்டு வங்கி மூலமாக உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 1 பில்லியன் யூரோக்களை வழங்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததுடன், உலக அளவில் பெரும் உணவு தட்டுப்பாட்டையும், எரிவாயு தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இருநாட்டுகளுக்கு இடையிலான போர் நடவடிக்கை முடிவில்லா நிலையை அடைந்து, தற்போது இந்த போர் நடவடிக்கை எப்போது நிறைவடையும் என்ற குழப்பமான சூழ்நிலையை அடைந்துள்ளது.
The EU through the European Investment Bank has allocated €1 billion to #Ukraine, another €590 million will be transferred later, the European Commission said. pic.twitter.com/4lB9svBLNr
— NEXTA (@nexta_tv) July 25, 2022
ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலில் உக்ரைனின் பல பில்லியன் மதிப்புள்ள பெரும்பாலான உள்கட்டமைப்புகள் முற்றியலுமாக சிதைந்து பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கவலைக் உள்ளாக்கியுள்ளது.
இந்தநிலையில், ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் மூலம் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 1 பில்லியன் யூரோக்களை வழங்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பு என எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்
இதனைத் தொடர்ந்து கூடுதலாக 590 மில்லியன் யூரோக்கள் கூடிய விரைவில் வழங்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தகவல் தெரிவித்துள்ளது.