கிரீன்லாந்தில் களமிறங்கிய ஐரோப்பியப் படைகள்... அடம்பிடிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கிற்கு ஒரு சிறிய பிரெஞ்சு இராணுவப் படைப்பிரிவு களமிறங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது உரிமையை
பல ஐரோப்பிய நாடுகள் உளவுப் பணி என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையில் சிறிய எண்ணிக்கையிலான படைகளை கிரீன்லாந்தில் களமிறக்க திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது பிரெஞ்சு இராணுவப் படைப்பிரிவு களமிறங்கியுள்ளது.

பகுதி சுயாட்சி பெற்ற டென்மார்க்கின் ஒரு பகுதியான அந்த ஆர்க்டிக் தீவின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உரிமையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,
ஜேர்மனி, ஸ்வீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவம் கிரீன்லாந்தில் களமிறக்கப்பட உள்ளது.
இதனிடையே, தற்போது களமிறக்கப்பட்டுள்ள படைப்பிரிவு விரைவில் தரை, வான் மற்றும் கடல் என வலுப்படுத்தப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவை விட மூன்று மடங்கு அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு... போர் மிரட்டல் விடுக்கும் ட்ரம்ப்
ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவு அழுத்தமான அரசியல் அதிர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும், நேட்டோ அமைப்பு உறுதியுடன் இருப்பதை அமெரிக்காவிற்கு உணர்த்தப்படும் என்றும் மூத்த இராஜதந்திரி Olivier Poivre d'Arvor குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை அன்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை சந்திப்பதற்காக வாஷிங்டனுக்குப் பயணம் செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரான்சின் 15 பேர்கள் கொண்ட சிறிய இராணுவம் கிரீன்லாந்தில் தரையிறங்கியுள்ளது.
சந்திப்பைத் தொடர்ந்து, டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென், பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தபோதிலும், இரு தரப்பினருக்கும் இடையே அடிப்படை கருத்து வேறுபாடு இருப்பதாகவே கூறினார்.
கிரீன்லாந்து தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் தற்போதும் அடம்பிடித்து வருகிறார். தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களுக்கு கிரீன்லாந்து தேவை என்றே ட்ரம்ப் கூறி வருகிறார்.

இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை ட்ரம்ப் நிராகரிக்கவில்லை என்றாலும், டென்மார்க்குடன் ஒரு தீர்வை எட்ட முடியும் என்று தாம் கருதுவதாக புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.
சீனாவும் ரஷ்யாவும் கிரீன்லாந்துக்காக போட்டியிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் ட்ரம்ப், கடந்த வாரம் வெனிசுலா விவகாரத்தில் நடந்ததைப் போல தங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதரகம் குற்றச்சாட்டு
இதனிடையே, கிரீன்லாந்திற்கு மேலதிக ஐரோப்பியப் படைகளை அனுப்புவதால், ஆர்க்டிக் பிரதேசம் தொடர்பான ஜனாதிபதி ட்ரம்பின் முடிவை அது பாதிக்கும் என்று தாம் நினைக்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
ஐரோப்பியப் படைகள் மொத்தம் குவிக்கப்பட்டாலும், கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் ட்ரம்பின் இலக்கைச் சற்றும் பாதிக்காது என்றே கரோலின் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், போலந்து தற்போது தங்கள் படைகளை கிரீன்லாந்திற்கு அனுப்பாது என குறிப்பிட்டுள்ள பிரதமர் டொனால்ட் டஸ்க், ஆனால், அங்கு அமெரிக்காவின் எந்தவொரு இராணுவத் தலையீடும் ஒரு அரசியல் பேரழிவாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.

இதனிடையே, ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் என்ற தவறான சாக்கின் கீழ், நேட்டோ அமைப்பு அங்கு இராணுவ இருப்பை உருவாக்கி வருகிறது என பெல்ஜியத்தில் உள்ள ரஷ்ய தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும், ஐரோப்பிய நேட்டோப் படைகள் களமிறக்கப்படுவது, ஆர்க்டிக் என்டியூரன்ஸ் எனப்படும் டென்மார்க் தலைமையிலான கூட்டுப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக, சில டசின் வீரர்களை மட்டுமே கொண்டுள்ள நடவடிக்கையாகும்.
ஆனால், களமிறக்கப்பட்டுள்ள இராணுவம் எப்போதுவரையில் கிரீன்லாந்தில் நீடிப்பார்கள் என்பதில் விளக்கமளிக்கப்படவில்லை. 13 பேர்கள் கொண்ட ஜேர்மன் படைகள் சனிக்கிழமை வரையில் மட்டுமே கிரீன்லாந்தில் காணப்படுவார்கள். அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தில் ஏற்கனவே ஒரு இராணுவத் தளம் உள்ளது, அதில் தற்போது 150 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |