உலகக் கிண்ணத்தைப் புறக்கணிக்கத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்
ஃபிஃபாவின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
3 பில்லியன் பவுண்டு
உலகக் கிண்ணம் மற்றும் கிளப் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளை நிர்வகிக்கும் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஃபிஃபா (FIFA) வகுத்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

புதிய ஃபிஃபா ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் நிறுவனத்தில் 20 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்புக்கு தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 3 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் திரட்ட முடியும்.
இத்திட்டங்களுக்கு பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இத்திட்டம் வெற்றிபெற்றால், தற்போது 56 வயதாகும் இன்ஃபான்டினோ கணிசமான தொகையை ஊக்கத்தொகையாகப் பெறுவார்.
மட்டுமின்றி, 2031-ல் அவரது இறுதி ஃபிஃபா பதவிக்காலம் கட்டாயமாக முடிவடைந்தவுடன், அவர் புதிய துணை நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆணையர் பொறுப்பிற்கும் செல்லக்கூடும்.
இந்தத் திட்டங்களுக்கு யுஇஎஃப்ஏ ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்பந்தின் நிர்வாக அமைப்புகள் ஒருபோதும் தாண்டக் கூடாத எல்லையை இது தாண்டுகிறது.
யுஇஎஃப்ஏ இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், ஃபிஃபாவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பது குறித்து யுஇஎஃப்ஏ நாடுகள் விவாதிக்க உள்ளன.
உறுப்பு சங்கங்கள் இந்த வாரம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்காக இணையவழியில் கூடவுள்ளன, இதில் புறக்கணிப்பு என்பதும் விவாதிக்கப்படும் தலைப்புகளில் இடம்பெற்றுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், பல்வேறு கால்பந்து சங்கங்கள் ஃபிஃபாவைச் சந்தித்தன, ஆனால் இந்தத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை.
ட்ரம்பிற்கும் தொடர்பு
யுஇஎஃப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின், சமீப வாரங்களில் இன்ஃபான்டினோவின் ஃபிஃபாவை ஏற்கனவே விமர்சித்து வருகிறார். ஃபிஃபா தலைவருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுனின் சிவப்பு அட்டைக்கான தடை நீக்கப்பட்டதற்கு அவர் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்ஃபான்டினோவின் இந்த வெட்கங்கெட்ட திட்டத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள 'த்ரைவ் கேபிடல்' (Thrive Capital) நிறுவனம், இதில் முன்னணியில் உள்ள ஏலதாரராகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், விமர்சனங்களுக்குப் பதிலளித்த இன்ஃபான்டினோ, இந்தத் திட்டங்கள் உறுப்பு சங்கங்களுக்கு ஃபிஃபா அதிக நிதியை வழங்க வழிவகுக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது 8 மில்லியன் டொலராக இருக்கும் நிதியுதவி 2027 மற்றும் 2030ல் 20 மில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் இன்ஃபான்டினோ வாதிடுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |