Pfizer உட்பட 3 டசின் மருந்து நிறுவனங்கள்... ட்ரம்பால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கேட்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்து மருந்து நிறுவனங்கள் மீது வரி விதிக்கலாம் என்ற நிலையில், Pfizer உட்பட 3 டசின் மருந்து நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோரியுள்ளது.
தொடர்ந்து செயல்பட உதவி
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மருந்து கண்டுபிடிப்புகளின் செலவை ஈடுசெய்யும் நடவடிக்கைகள் உட்பட, இறக்குமதிகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து செயல்பட உதவி கோரியுள்ளனர்.
இதில் Pfizer, AstraZeneca மற்றும் Eli Lilly உள்ளிட்ட 3 டசின் மருந்து நிறுவனங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அமெரிக்காவை விட ஐரோப்பாவில் அவர்கள் செலவு குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்றும், அங்கு மருந்துகள் பிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய நாடுகளை விட சராசரியாக இரண்டு மடங்கு விலையில் விற்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, நிறுவனங்கள் தற்போது மருந்துகளுக்கான பல நாடுகளின் மருத்துவ பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்ற நிலை உள்ளது எனவும், இதனால் விதிமுறைகளை எளிமைப்படுத்துமாறும் மருந்து நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக் கொண்டன.
மிகப்பெரிய சந்தை
மேலும், ஐரோப்பாவின் நோயாளிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த திட்டங்கள் யதார்த்தமாக மாறுவதை உறுதிசெய்ய வரும் வாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்புகளில் இருந்து தப்பிக்க ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு செயல்பாடுகளை மாற்ற வேண்டிய சூழல் இருப்பதாக கடந்த வாரம் இந்த நிறுவனங்கள் ஐரோப்பிய ஆணையருடனான சந்திப்பின் போது எச்சரித்திருந்தது.
பெரிய மருந்து நிறுவனங்களுக்கு விற்பனையில் அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாகும், மேலும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் மருந்துகளுக்கான விநியோகத்தில் ஒன்றோடொன்று இணைத்துள்ளன.
2023ல் மட்டும் அமெரிக்காவுக்கான மருந்து மற்றும் தொடர்புடையப் பொருட்களின் எற்றுமதி 101.49 பில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |