கோவிட் சான்றிதழ் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தில் பயணத்திற்கான EU டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆணையின்படி. EU டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் இந்த ஆண்டு ஜூன் 30 அன்று காலாவதியாகிவிடும்.
ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் முழுவதும் கொரோனா வைரஸ் இன்னும் அதிகமாகப் பரவிவருகிறது என்ற மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோவிட் சான்றிதழை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதற்கான முன்மொழிவை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 30, 2023 வரை EU டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் நீட்டிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை அறிவிக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்திக்குறிப்பின்படி, கட்டுப்பாடுகளை நீட்டிப்பதன் மூலம், நுழைவுக் கட்டுப்பாடுகளைப் பராமரிக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குப் பயணிக்கும் போது, பயணிகள் தங்கள் கோவிட் சான்றிதழைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.