கத்தார் உலகக்கோப்பை ஊழல்! ஐரோப்பிய பாராளுமன்ற துணைத் தலைவர் கைது
உலகக்கோப்பை போட்டியை நடத்தும் கத்தார் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஐரோப்பிய பாராளுமன்ற துணைத் தலைவர் ஈவா கைலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு
கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் கத்தார் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் கத்தார் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள 14 துணைத் தலைவர்களில் ஒருவரான ஈவா கைலி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கௌரவத்தை சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக கத்தாரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
@ISOPIX/SIPA
அவருடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் பெல்ஜியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை 19 வீடுகள் மற்றும் பாராளுமன்ற அலுவலகங்களை பெல்ஜிய பொலிஸார் சோதனையிட்டனர். அப்போது கணினிகள், செல்போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.
பதவி நீக்க முடிவு
இதற்கிடையில் ஐரோப்பிய பாராளுமன்றம் ஈவா கைலியை துணைத் தலைவர் பதிவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
கைலியின் வழக்கறிஞர்கள், கத்தரின் லஞ்சத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிடுகின்றனர்.
@Eurokinissi/ZUMA/IMAGO