சர்வதேச இசை நிகழ்ச்சியில் வென்ற கையோடு... காதலிக்கு முத்தமிட்டு போர்க்களம் திரும்பிய உக்ரேன் பாடகர்
இத்தாலியில் நடந்த Eurovision இசை நிகழ்ச்சியில் வென்ற கையோடு உக்ரைனின் Kalush குழுவின் முதன்மை பாடகர் போர்க்களத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் நடந்து முடிந்த Eurovision இசை நிகழ்ச்சியில் உக்ரைனின் Kalush குழுவினர் வெற்றிபெற்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் திரும்பியுள்ள Kalush இசைக்குழுவின் முதன்மை பாடகர் Oleg Psiuk தமது காதலிக்கு முத்தமிட்டு, ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள போர்க்களம் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Oleg Psiuk காதலிக்கு முத்தமிட்டு பிரியும் புகைப்படங்கள் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, அவர் விமான நிலையம் புறப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மேயர் பெயரில் கொலைப்பட்டியல்
மொத்தம் 631 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டிச்சென்ற Kalush இசைக்குழுவினருக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான இசை நிகழ்ச்சியை உக்ரைனின் மரியுபோல் நகரில் நடத்தவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Eurovision இசை நிகழ்ச்சியில் Stefania என்ற பாடலை Kalush இசைக்குழுவினர் உருக்கத்துடன் பாடி ரசிகர்களை உருக வைத்தனர். ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் Stefania என்ற பாடல் உக்ரைனில் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.