பொருளாதார மந்தநிலையிலிருந்து தப்பிய பிரதான Eurozone நாடுகள்: கணிப்புகள் முறியடிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் Eurozone என அறியப்படும் 20 நாடுகளில் பெரும்பாலானவை பொருளாதார மந்தநிலையில் இருந்து தப்பியுள்ளதாக மகிழ்வான தகவல் வெளியாகியுள்ளது.
கணிப்புகளை முறியடித்து
பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளை முறியடித்து ஐரோப்பாவின் பிரதான நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
2024 முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விடவும் மிக விரைவாக Eurozone நாடுகளின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.3 சதவிகிதமாக விரிவடைந்துள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளை இது முறியடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது முதல் காலாண்டில் 0.3 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. முதல் காலாண்டில் இத்தாலியின் GDP என்பது 0.1 சதவ்கிதமாக இருக்கும் என்ற கணிப்புகளை தூளாக்கியுள்ளது.
மட்டுமின்றி, தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக இத்தாலி வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என அறியப்படும் ஜேர்மனியும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 0.2 சதவிகிதம் என பதிவாகியுள்ளது. ஆனால் ஜேர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது என்றே பதிவாகியுள்ளது.
முதல் காலாண்டில் அசுர வளர்ச்சி
இன்னொரு Eurozone நாடான ஸ்பெயின் முதல் காலாண்டில் அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 0.7 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
பொருளாதார நிபுணர்கள் 0.4 சதவிகிதம் என கணித்துள்ள நிலையில், 0.7 சதவிகிதம் என வளர்ச்சி கண்டுள்ளது. மட்டுமின்றி, 2023ல் நான்காவது காலாண்டிலும் 0.7 சதவிகித வளர்ச்சியை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது.
இதனிடையே, பிரான்சின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்ப்புகளை மீறி வேகமெடுத்துள்ளது என்றே கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் 0.1 சதவிகித வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், தற்போது, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.2 சதவிகித வளர்ச்சி பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக செலவு செய்ய முன்வந்துள்ளதே, பிரெஞ்சு பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது. ஆனால் ஜிடிபி வளர்ச்சியில் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பு சுழியமாக குறைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |