உயரும் பெட்ரோல் விலை... முக்கிய ஐரோப்பிய சந்தைகளில் அதிகரிக்கும் மின்சார வாகன விற்பனை
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஐரோப்பாவின் முக்கிய வாகனச் சந்தைகளில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய சந்தை
ஈரான் போரின் காரணமாக பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் எஞ்சின்களுக்கு மாற்றுகளைத் தேடத் தொடங்கினர்.

விற்பனையின் ஒரு குறியீடாகக் கருதப்படும் புதிய பேற்றரி-மின்சார வாகனங்களின் (BEV) பதிவுகள், இந்தக் காலாண்டில் ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட 29.4 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 560,000 ஆக உயர்ந்தன.
மேலும், 15 ஐரோப்பிய சந்தைகளில் மார்ச் மாதத்தில் மட்டும் இந்தப் பதிவுகள் 51.3 சதவீதம் அதிகரித்து 240,000-ஐத் தாண்டின. கடந்த ஆண்டு, அந்தச் சந்தைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பில் நடந்த மொத்த பேற்றரி மின்சார வாகன விற்பனையில் 94% பங்கைக் கொண்டிருந்தன; இந்த நாடுகளின் CO2 உமிழ்வைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுடன் அவை இணக்கமாகச் செயல்படுகின்றன.
இதனிடையே, இந்தக் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட அரை மில்லியன் பேற்றரி மின்சார வாகனங்கள், ஆண்டுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் நுகர்வைக் குறைக்கப் போதுமானதாக இருக்கும் என தொடர்புடைய இரு அமைப்புகளின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விற்பனையில் 40 சதவீதம்
ஐரோப்பாவின் ஐந்து மிகப்பெரிய மின்சார வாகன சந்தைகளான ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகள், இந்த ஆண்டில் இதுவரை பேற்றரி மின்சார வாகன விற்பனையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
மார்ச் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தகப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து புதிய கார்களில் 21.2 சதவீதம் மின்சாரக் கார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜேர்மனிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய மின்சார வாகன சந்தையான பிரித்தானியாவில்,
பெட்ரோலிய விலை உயர்வின் காரணமாக, காலாண்டில் மின்சார வாகனப் பதிவுகள் 12.8% அதிகரித்ததாகவும், இது அந்நாட்டின் புதிய கார் விற்பனையில் 22.5 சதவீதமாக இருந்ததாகவும் நியூ ஆட்டோமோட்டிவ் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |