ஒவ்வொரு 10 நிமிடமும் காசாவில் குழந்தைகள் அடையும் பாதிப்பு! ஐ நா பகீர் தகவல்
காசாவில் 10 நிமிடத்திற்கு ஒரு பாலஸ்தீனிய குழந்தை பாதிக்கப்படுவதை ஐ நா அமைப்புகள் கண்டிக்கின்றன.
காசாவில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை
ஐ நா குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஐ நா மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் (OCHA) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
UNICEF அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
OCHA வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 1 முதல் வெள்ளி வரை வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மனிதாபிமான உதவி பணிகளில் 15% "இஸ்ரேலிய அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளன".
ஐ.நா வலியுறுத்தல் இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் ஏற்பட்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.
குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ நா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |