கோடிகளில் வருமானம்.., வீட்டிற்கு ஒரு Youtuber இருக்கும் கிராமம்: எங்கு தெரியுமா?
பாகிஸ்தானில் இருக்கும் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு youtuberகள் இருக்கின்றனராம்.
இந்த கிராமத்தில் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இப்படி youtube பிரபலங்களாக வலம் வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சுமார் 80 வீடுகள் இருக்கின்றனவாம். இந்த 80 வீடுகளிலும் வீட்டிற்கு ஒரு youtuber இருக்கிறார்களாம்.
வீட்டுக்கு ஒரு Youtuber இருந்தாலும், இவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது.
அதாவது, மத ரீதியான காரணங்களுக்காக இந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் பெண்களை வீடியோவில் இடம்பெற அனுமதிப்பதில்லையாம்.
இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு youtuberகளுக்கும், பல லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு வருவாயும் அதிகமாக உள்ளதாம்.
இப்படி youtube மூலம் பிரபலமாக இருக்கும் ஒருவர் பேசுகையில், முன்னர் இருந்த தனது ஆண்டு வருமானத்தை தற்போது ஒரே நாளில் சம்பாதித்து விடுவதாக கூறுகிறார்.
இந்த யூடியூப் அவர்கள் பெரும்பாலும் பக்தி மற்றும் கருணை தொடர்பான வீடியோக்களை பதிவிடுகின்றனர்.
இந்த கிராமத்தில் இருப்போர் சிலர் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப வந்து வீடியோ பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர்.
மேலும், பெரும்பாலானோர் youtubeஆல் வழங்கப்படும் சில்வர் பட்டன் மற்றும் கோல்டன் பட்டனை வைத்திருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |