2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் மாற்றங்கள்
சீதோஷ்ணம் முதல் கொரோனா விதிகள் வரை, சுவிட்சர்லாந்தில் இம்மாதம் பல மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
2021 அக்டோபரில் சுவிட்சர்லாந்தில் நிகழ இருக்கும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தடுப்பூசி பெறாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை இனி இலவசம் கிடையாது.
இம்மாதம் (அக்டோபர்) 10ஆம் திகதி முதல், தடுப்பூசி பெறாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமானால் 50 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் செலுத்தவேண்டும்.
அக்டோபர் 31 அன்று, சுவிட்சர்லாந்திலுள்ள கடிகார முட்கள் அனைத்தும், ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது, சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரு மணி நேரம் முன்னதாகவே கணக்கிடப்படும்.
சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியா செல்வதற்கான புதிய விதிகள்
- சுவிட்சர்லாந்து தற்போது பிரித்தானியாவின் பயணப்பட்டியலில் பச்சைப் பட்டியலில் உள்ளது. அதாவது, பிரித்தானியாவில், இதுதான் குறைந்த பட்ச அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலாகும்.
- இன்று (அக்டோபர் 4) முதல், சுவிஸ் வாழிட உரிமம் பெற்றோர் பிரித்தானியா செல்வதற்கான விதிகள் மாற்றப்பட உள்ளன.
- ஆக, பிரித்தானியா செல்லும் முன் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
- இங்கிலாந்து சென்றதும் செய்யப்பட இருக்கும் இரண்டாவது கொரோனா சோதனைக்காக கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ளுங்கள்.
- நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய உதவும் passenger locator form ஒன்றை பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.ch/20210929/everything-that-changes-in-switzerland-in-october-2021/