பிசிசிஐ தலைவராக உள்ள முன்னாள் CSK வீரர்?
பிசிசிஐ தலைவராக முன்னாள் CSK வீரர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ புதிய தலைவர்
பிசிசிஐயின் தலைவராக இருந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி, தனது வயது காரணமாக அந்த பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜிவ் சுக்லா பொறுப்பேற்று உள்ளார்.
வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி நடைபெற உள்ள பிசிசிஐ வருடாந்தரபொதுக்கூட்டத்தில், பிசிசிஐ தலைவர், துணை தலைவர், செயலாளர். பொருளாளர், ஐபிஎல் சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் என்றாலும், பெரும்பாலும் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.
சமீபகாலமாக சவுரவ் கங்குலி மற்றும் ரோஜர் பின்னி என முன்னாள் வீரர்களே பிசிசிஐ தலைவராக இருந்து வருகின்றனர்.
இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர் இந்த பதிவிற்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சச்சின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியானது.
இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிதுன் மன்ஹாஸ்
45 வயதினை மிதுன் மன்ஹாஸ், காஷ்மீரை சேர்ந்தவர் ஆவார். டெல்லி அணிக்காக 157 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 27 சதங்கள் உட்பட 9714 ஓட்டங்களை குவித்துள்ளார்.
2007-2008 ரஞ்சி தொடரில், 921 ஓட்டங்கள் எடுத்து, டெல்லி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக.இருந்தார்.
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, புனே ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் இருந்து ஐபிஎல்லில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
குஜராத் மற்றும் பெங்களூரு ஆகிய ஐபிஎல் அணிகளில் உதவி பயிற்சியாளராக இருந்துள்ளார்.
மேலும், வங்காளதேச 19 வயதுக்குட்பட்ட அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டால், சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் பிசிசிஐ தலைவரான முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ரகுராம் பட் பிசிசிஐ பொருளாரராக தேர்வு செய்யப்படலாம் எனவும், துணைத் தலைவராகராஜீவ் சுக்லா, ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவராக அருண் சிங் துமல் நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |