ஹெலிகாப்டர் பயணம்; விஜய் கரூர் சென்றால் பாதுகாப்புக்கு இதுதான் வழி - முன்னாள் DCP பகிர்ந்த தகவல்
விஜய் மீண்டும் கரூர் செல்வது குறித்த பல்வேறு தகவல்களை முன்னாள் DCP ராஜேந்திர ராஜா பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் கரூர் பயணம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் சமீபத்தில் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.
விஜய் தற்போது வரை பாதிக்கப்பட்ட நேரில் சென்று சந்திக்காதது விமர்சனத்தை பெற்றுள்ளது. அதேவேளையில் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு தவெக தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் கரூர் பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து முன்னாள் காவல் உதவி ஆணையர் ராஜேந்திர ராஜா பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |