ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் FBI இயக்குனர் - 8647 என்ற பதிவின் அர்த்தம் என்ன?
ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி முன்னாள் FBI இயக்குனர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ட்ரம்பிற்கு கொலை மிரட்டல்
கடந்த 2013 ஆம் ஆண்டு, ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஜேம்ஸ் கோமி என்பவர் FBI-யின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு டிரம்ப் தனது முதலாவது ஆட்சி காலத்தில், ஜேம்ஸ் கோமியை அந்த பொறுப்பில் இருந்து நீக்கினார்.
சமீபத்தில், கடற்கரையில் கடல் ஓடுகளால் உருவாக்கப்பட்ட 8647 என்ற எண்ணின் படத்தை, ஜேம்ஸ் கோமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
கோமியின் இந்த பதிவு, தனது தந்தைக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் என டிரம்பின் மகன் ஜுனியர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
Just James Comey causally calling for my dad to be murdered.
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) May 15, 2025
This is who the Dem-Media worships. Demented!!!! pic.twitter.com/4LUK6crHAT
இந்த பதிவு வைரலான நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள கோமி, அந்த எண் வன்முறையை குறிக்கும் என்பது தெரியாது. நான் அது ஒரு அரசியல் செய்தி என நினைத்தேன். ஆனால் நான் எந்த வகையான வன்முறையையும் எதிர்க்கிறேன், எனவே அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.
8647 அர்த்தம் என்ன?
8647 என குறிப்பிடப்பட்டுள்ள பதிவில், 86 என்பது கொலை செய்வதை குறிப்பதாகவும், 47 என்பது டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபர் என்பதை குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
We are aware of the recent social media post by former FBI Director James Comey, directed at President Trump. We are in communication with the Secret Service and Director Curran. Primary jurisdiction is with SS on these matters and we, the FBI, will provide all necessary support.
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) May 15, 2025
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள FBI இயக்குநர் காஷ்யப் படேல், "அதிபதி டிரம்ப் குறித்து ஜேம்ஸ் கோமி வெளியிட்ட பதிவை நாங்கள் அறிவோம். இந்த விஷயங்களில் முதன்மை அதிகார வரம்பு ரகசிய சேவையிடம் உள்ளது. மேலும் FBI, தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும்." என தெரிவித்துள்ளார்.
தற்போது ஜேம்ஸ் கோமி இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |