தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

South Korea
By Arbin Feb 19, 2026 11:09 AM GMT
Report

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு இராணுவ ஆட்சியை திணிக்க முயன்றதன் மூலம் கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்தியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைக்கு

டிசம்பர் 3, 2024 அன்று தேசிய நாடாளுமன்றத்தை மூட இராணுவப் படைகளை அனுப்புவதன் மூலமும், அரசியல்வாதிகளைக் கைது செய்ய உத்தரவிட்டதன் மூலமும் யூன் அரசியலமைப்பை சீர்குலைக்க முயன்றார் என்று சியோல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை | Ex President Jailed For Life

மட்டுமின்றி, அவரது நடவடிக்கைகள் தென் கொரியாவின் ஜனநாயகத்தை அடிப்படையில் சேதப்படுத்தியுள்ளன, மேலும் கடுமையான தண்டனைக்கு தகுதியானவை என்று தலைமை நீதிபதி ஜி க்வி-யியோன் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தரப்பில் அவருக்கு மரண தண்டனை கோரப்பட்டிருந்தது. யூன் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறுகிய காலமே நீடித்தாலும், யூனின் இராணுவச் சட்ட உத்தரவு நாட்டை முன்னெப்போதையும் விட பிளவுக்கு இட்டிச்சென்றது, மேலும் தண்டனை விதிக்கப்பட்டபோது அந்த ஆழமான பிளவுகள் நீதிமன்றத்திற்கு வெளியே முழுமையாக வெளிப்பட்டன.

விசாரணை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, யூனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடி, மீண்டும் யூன் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார்

பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார்

தீர்ப்பைத் தொடர்ந்து அவர்களில் பலர் கண்ணீர் விட்டனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, யூன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், தனக்கு எதிரான தீர்ப்பை அறிந்ததும் யூன் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. தீர்ப்பு ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை என்றும், நீதிபதி முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதை பின்பற்றுவதாகவும் அவரது சட்டத்தரணிகள் குற்றம் சாட்டினர்.

ஊழல் குற்றச்சாட்டுகள்

இரு தரப்பினரும் மேல்முறையீடு செய்தால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும், அதாவது தீர்ப்பு இறுதி செய்யப்படுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.

கடந்த டிசம்பர் 3, 2024 அன்று நேரலையில் இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் யூன் தென் கொரிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். வட கொரியாவுக்கு அனுதாபம் காட்டும் அரசுக்கு எதிரான சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் அவர் விளக்கமளித்தார்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை | Ex President Jailed For Life

ஆனால் அவர் உள்நாட்டுப் பிரச்சனைகளால் உந்தப்பட்டார் என்பது விரைவில் தெளிவாகியது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்த எதிர்க்கட்சிகள் அவரை ஒரு முடக்கப்பட்ட ஜனாதிபதியாக ஆக்கியது, அதே நேரத்தில் அவரது மனைவி கிம் கியோன் ஹீ பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் மையத்தில் இருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவச் சட்டத்தை ரத்து செய்ய அவைக்குள் போராடியதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குள் அவர் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து பல மாதங்களாக அரசியல் குழப்பம், யூனின் பதவி நீக்கம் மற்றும் அவருக்கும் பிற உயர் அதிகாரிகளுக்கும் எதிரான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் என தென் கொரியா கடும் நெருக்கடி நாட்களை எதிர்கொண்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US