9 பெண்களின் நிரூபிக்கப்பட்ட 17 குற்றச்சாட்டுகள்! முன்னாள் பாதிரியார் கிறிஸ் பிரைன் குற்றவாளி!
பிரித்தானியாவில் 17 அநாகரீகமான தாக்குதலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
நிரூபிக்கப்பட்ட முன்னாள் பாதிரியார் மீதான குற்றச்சாட்டுகள்
பிரித்தானியாவின் ஷெஃபீல்டைச் சேர்ந்த 68 வயது கிறிஸ் பிரைன் என்ற முன்னாள் பாதிரியார், 9 பெண்களிடம் தவறான முறையில் தாக்கியதாக சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
நைன் ஓ கிளாக் சர்வீஸ் என்ற கிறிஸ்துவ குழுவை 1980-கள் மற்றும் 90-களில் கிறிஸ் பிரைன் நடத்திய போது இந்த சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையின் தடுப்பு சுவருக்கு கருப்பு நிறத்தில் வண்ணம் பூச திட்டம்! காரணம் தெரியுமா?
லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, Wilmslow-வின் முன்னாள் பாதிரியார் கிறிஸ் பிரைன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
நிருபிக்கப்பட்ட 17 குற்றச்சாட்டுகள் தவிர மற்ற 15 குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிறிஸ் பிரைன் மீதுள்ள 4 குற்றச்சாட்டுகள், மற்றொரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நீதிமன்ற குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |