தமிழ்நாட்டு காவல்துறை முக்கிய தேர்வு! 21 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் விண்ணப்பம்!
தமிழ்நாட்டு காவல்துறையில் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இன்றும் நாளையும் எழுத்து தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023ஆம் ஆண்டு காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது.
விருப்பமுள்ள பட்டதாரிகள், இணையம் வழியாக ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு 1,45,709 பேரும், பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40,901 பேரும் என 621 பணியிடங்களுக்கு 1,86610 பேர் விண்ணப்பித்தனர்.
காவல் துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத காலிப் பணியிடங்களுக்கு 6,101 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பதவிகளுக்கான தேர்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று பொது பிரிவினருக்கும், நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் தமிழ் தகுதி தேர்வு இன்று மாலை நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |