உங்க கன்னத்துல மட்டும் சதை நிறைய இருக்கா? இதனை சரி செய்ய இந்த குட்டி பயிற்சியை செய்திடுங்க
பொதுவாக நம்மில் பலருக்கு அழகான கன்னங்கள் வேண்டும் என்ற ஆசை காணப்படும். ஆனால் சிலருக்கோ கன்னப் பகுதிகளில் மட்டும் உடலின் மற்ற பகுதிகளை விட கன்னப் பகுதிகளில் மட்டும் சதை அதிகமாக இருக்கும்.
அது சில சமயங்களில் தாடைப் பகுதிக்கும் கீழ் சதை தொங்குவது போல இரட்டை தாடை போல தோன்றும். அவ்வாறு இல்லாமல் முகத்துக்கு ஏற்ற சீரான தசைகளுடன் கன்னத்தை வைத்துக் கொள்வது ஒரு சில பயிற்சிகள் உள்ளது. தற்போது அதனை பார்ப்போம்.
தாடைப்பயிற்சி
தலையைப் பின்னோக்கி சாய்த்து, சீலிங்கைப் பாருங்கள். உங்கள் கன்னத்திற்கு கீழே ஒரு இழுவையை உணர்வதற்காக, உங்கள் கீழ் தாடையை முன்னோக்கி அழுத்துங்கள்.
இதனால் உங்கள் கன்னம், கழுத்து பகுதியில் உள்ள சருமம் இழுக்கப்படுவதை உணரலாம். இதேபோல 10 எண்ணிக்கை வரை வைத்திருக்கவும். ரிலாக்ஸ் ஆகி , தலையை நேராகக் கொண்டு வந்து, இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். இதை தினசரி 10- முதல் 15 முறைகள் செய்யவும்.
உதட்டை குவியுங்கள்
தலையைப் பின்னோக்கி சாய்த்து மேல்நோக்கிப் பாருங்கள். முத்தமிடுவது போல உதடுகளை குவித்துக் கொள்ளவும். இதனால் உங்கள் கன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் இழுக்கப்படும். 5 வரை எண்ணி விட்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதேபோல ஒரு நாளைக்கு 10- முதல் 15 முறைகள் செய்யவும்.
நாக்கை நீட்டுங்கள்
உங்கள் நாக்கை எவ்வளவு வெளியில் நீட்ட முடியுமோ அந்த அளவுக்கு வாயிலிருந்து வெளியே நீட்டுங்கள். அதை மேல்நோக்கி சுழற்றி, உங்கள் மூக்கைத் தொட முயற்சி செய்யுங்கள். இதேபோல 10 எண்ணிக்கைக்கு வைத்திருந்து பின் விடுவிக்கவும். இதேபோல ஒரு நாளைக்கு 10 முறை செய்யவும்.