வெப்ப அலையில் தகிக்கும் உலகின் பல்வேறு நாடுகள்: 1,000 கடந்த இறப்பு எண்ணிக்கை
உலகின் பல பகுதிகள் தற்போது சராசரிக்கும் அதிகமான வெப்பநிலையை அனுபவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
30,000 மக்கள் மரணம்
இந்த நிலை பெரும்பாலும் புவி வெப்பமடைதலின் விளைவு என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சவுதி அரேபியாவில் வெப்பநிலை 52 டிகிரியை நெருங்குவாதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெப்ப அலை காரணமாக புனித தலமான மக்காவில் சுருண்டு விழுந்து இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 1,000 கடந்துள்ளது. 1,200க்கும் அதிகமானோர் சவுதி அரேபியாவில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் சிகிச்சையில் உள்ளனர்.
2003ல் ஐரோப்பா முழுவதும் வாட்டியெடுத்த வெப்ப அலையில் சிக்கி, 30,000 மக்கள் மரணமடைந்துள்ளனர். நீண்ட காலத்திற்கு அதிக வெப்பநிலை என்பது காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கலாம் என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, அமெரிக்காவில் கலிபோர்னியாவின் சில பகுதிகளில் ஏற்கனவே காட்டுத்தீ வியாபித்து வருகிறது. வட அமெரிக்காவில் வெப்ப அலை காரணமாக சுமார் 70 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நியூ பிரன்சுவிக், நோவா ஸ்கோடியா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு கனேடிய மாகாணங்களிலும் வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
வாரத்தின் இரண்டாவது பாதியில் வெப்பநிலை 38 டிகிரியை தாண்டும் என்றே அமெரிக்க வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவின் வட மாகாணங்கள் தற்போது கடுமையான வெப்ப அலைக்கு இலக்காகி வருகிறது.
கடுமையான வெப்பம்
வெப்பநிலை 45C வரையில் பதிவாகியுள்ளது. நீடித்த வெப்பம் காரணமாக மின் நுகர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் தலைநகரமான டெல்லியில் மின்வெட்டுக்கு வழிவகுத்துள்ளது.
மட்டுமின்றி, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இந்த மாத தொடக்கத்தில் மூன்று நாட்களில் மட்டும் வெப்ப அலை காரணமாக 50 பேர் மரணமடைந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் பதிவான முதல் வெப்ப அலையின் போது பல இறப்புகள் பதிவாகியுள்ளன. கடுமையான வெப்பம் தொடங்கியதில் இருந்து பிரித்தானிய ஊடக பிரபலம் உட்பட பல எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இறந்துள்ளனர்.
மேலும், கிரேக்க அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் பாடசாலைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |