வெளிநாடு ஒன்றில் வானில் தோன்றிய மர்மப்பொருளால் பரபரப்பு... பறக்கும் தட்டா?: விசாரணை நடத்த கோரிக்கை
சிலி நாட்டில் வானில் தோன்றிய மர்மப்பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், அது குறித்து அமெரிக்கா விசாரிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிலி நாட்டில் அடிக்கடி பறக்கும் தட்டுக்கள் கண்ணில் படுவதால், அந்நாடு, உலகின் பறக்கும் தட்டுக்களின் தலைநகரம் என்றே அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், செப்டம்பரில் அந்நாட்டில் வானில் தோன்றிய ஒரு மர்மப்பொருளைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை சிலி நாட்டைச் சேர்ந்தவரான Hugo Franzani என்பவர் எடுத்துள்ளார். அவர் தன் வீட்டின் பின்னாலிருந்து பார்க்கும்போது, வானில் ஏதோ ஒரு பொருள் மின்னிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்.
உடனே, தனது மொபைலைப் பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துள்ளார் அவர். அவர் நான்கு வீடியோக்கள் எடுத்த நிலையிலும், அந்த மர்மப்பொருள் மூன்று வீடியோக்களில் பதிவாகவில்லையாம். ஒரே ஒரு வீடியோவில் மட்டுமே அந்த மர்மப்பொருள் பதிவாகியுள்ளது.
சுருட்டு வடிவில் காணப்பட்ட அந்த பொருளிலிருந்து, கமெராவில் இருந்து வெளியாகும் ஃப்ளாஷ் போல ஒளி தோன்றியுள்ளது. அத்துடன், அவ்வப்போது, நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிற ஒளியும் அந்த பொருளின் பக்கவாட்டிலிருந்து தோன்றினவாம். Hugo பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென மறைந்த அந்த பொருள், மீண்டும் தோன்றி, மீண்டும் மறைந்துவிட்டதாம்.
தற்போது, அது என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக நிபுணர்கள் அந்த வீடியோவை ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்களாம்.
இதற்கிடையில், அமெரிக்க அரசின் பறக்கும் தட்டு கண்காணிப்பு அமைப்பின் முன்னாள் தலைவரான Lue Elizondo என்பவர், அமெரிக்கா அந்த மர்மப்பொருள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.