மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மகனுக்காக போராடிய தந்தையை சிறையில் தள்ளிய நாடு
ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 22 வயது மகனுக்காக போராடிய தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற
கடந்த 2022ல் நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில் கைதானவர்களில் ஒருவர் Mohammad Mehdi Karami. பல மாதங்கள் நீடித்த போராட்டங்களின் போது துணை ராணுவ வீரர் ஒருவரை கொலை செய்ததாக கூறி தொடர்புடைய இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2023 ஜனவரி மாதம் Mohammad Mehdi Karami தூக்கிலிடப்பட்டார். மகனை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றும் பொருட்டு Mashallah Karami சமூக ஊடக பக்கங்களில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் அவரது போராட்டம் வீணானதுடன், மகனும் தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்ட Mashallah Karami பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கொடூரத்தின் உச்சம்
இந்த நிலையிலேயே அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டியது, நன்கொடை சேகரித்தது உள்ளிட்ட குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
2022ல் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது கைதாகி, மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட குறைந்தது 8 பேர்கள் தற்போதும் சிறையில் உள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
முறையான விசாரணைகள் ஏதுமின்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனைக்கு விதிப்பது கொடூரத்தின் உச்சம் என்றும் மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |