இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்தாலே போதும்
சர்க்கரை நோயை பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், சர்க்கரை அளவு ஏறி, இறங்காமல் கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை செய்தாலே போதும்.
வேகமான நடைப்பயிற்சி
வேகமாக நடைபயிற்சி மேற்கொள்வது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
தினசரி 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வேகமாக விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்ய்யவேண்டும்.
சைக்கிள் ஓட்டுதல்
சைக்கிள் ஓட்டுவதால் உடலில் குளூக்கோஸ் அளவு ஒழுங்குமுறை மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சி தசை தளர்வை உருவாக்குகிறது, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கரித்து, குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
வாரத்திற்கு மூன்று முறை ஒரு நாளைக்கு 20-30 நிமிடங்கள் வலிமை உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.
யோகாசனம்
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை தீவிர யோகாசனங்கள் செய்வது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
யோகா பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை மேலாண்மைக்கும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சி செய்வது இன்சுலின் உணர்திறன் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது, ஒரு முழு உடல் பயிற்சியாகும்.
தினசரி சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
Adobe Stock
கயிறு தாண்டுதல்
கயிறு தாண்டுதல் பயிற்சி இதயத் துடிப்பை அதிகரித்து, எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. மேலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின்னர் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கயிறு தாண்டுதல் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
படி ஏறுதல்
தினசரி 15-20 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்.
இந்த பயிற்சி செய்வதன் மூலம் கால் தசைகளை ஈடுபடுத்துவதால் குளுக்கோஸ் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |