அடிவயிற்று கொழுப்பு, தொப்பை ஈஸியாக குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சிகள் தொடர்ந்து செய்தாலே போதும்!
அடிவயிற்று கொழுப்பு, தொப்பை பிரச்சினையை குறைக்க ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.
அவற்றை தினசரி தொடர்ந்து செய்து வந்தால் வேகமாக அடிவயிற்றுத் தொப்பையைக் கரைத்துவிட முடியும்.
தற்போது அடிவயிற்று கொழுப்பு, தொப்பை ஈஸியாக குறைக்க கூடிய ஒரு சில உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்..
க்ரஞ்சஸ்
கைகளை மேலே தூக்கிய படி, முட்டியை மடக்கி மெதுவாகக் குனிந்து நிற்கும் க்ரஞ்சஸ் பயிற்சிகள் ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும். தினமும் தொடர்ந்து செய்யும்போது பழகிவிடும். நாளாக நாளாக க்ராஸ் க்ரஞ்சஸ் பயிற்சிகளும் செய்யலாம். அது இன்னும் வேகமாக எடையைக் குறைக்கவும் கொழுப்பைக் கரைக்கவும் உதவும்.
நடைப்பயிற்சி
[CIIHJG ]
தினசரி நடைப்பயிற்சியுடன் சரிவிகித உணவான பேலன்ஸ்டு டயட்டை பின்பற்றும்போது மிக வேகமாக எடையைக் குறைத்துவிட முடியும். இந்த நடைப்பயிற்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கொழுப்பை வேகமாகக் குறைக்க உதவும்.
ஷூம்பா பயிற்சிகள்
ஷூம்பா பயிற்சி ஒட்டுமொத்த உடலையும் இயங்கச் செய்கிறது. இந்த பயிற்சிகள் இதயத்தை பலப்படுத்துகின்றன. ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்டிரால் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
இந்த பயிற்சியைத் தொடர்ச்சியாக செய்யும்போது ஒரு நிமிடத்திற்கு 9.5 கலோரி அளவைக் குறைக்க முடியுமாம். பிறகென்ன இன்னைக்கே ஷூம்பா ஆடத் தொடங்க வேண்டியதுதானே!
வெர்ட்டிக்கிள் லெக் பயிற்சிகள்
தரையில் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ கால்களை உயரே தூக்க வேண்டும். இதுதான் வெர்ட்டிக்கிள் லெக் பயிற்சிகள். இதை செய்யும்போது இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடைவதோடு, அடிவயிற்றில் உள்ள கொழுப்புகளை வேகமாகக் குறைக்க உதவுகிறது.
படுத்துக் கொண்டு, இரண்டு கால்களை நீட்டியபடி, பின் கால்களை 90 டிகிரியில் உயரே தூக்கி மெதுவாக கீழிறக்க வேண்டும். இதை காலையில் எழுந்ததும், இரவு தூங்கும்போது என இரண்டு முறை 20 நிமிடங்கள் வரை செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவும் வேகமாகவும் தொப்பையை குறைத்துவிட முடியும்.
சைக்கிளிங்
சைக்கிளிங் செய்யும்போது இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். அதேபோல கலோரிகள் எரிக்கப்படும் அளவும் அதிகமாகும். சைக்கிளிங் செய்யும்போது இடுப்பு மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் தசைகள் குறைய ஆரம்பிக்கும்.
ஏரோபிக்ஸ் பயிற்சி
ப்பையைக் குறைக்க வேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஏரோபிக் பயிற்சிகள் தான்.
ஏரோபிக் பயிற்சிகள் செய்வதும் எளிது. மிகச்சிறந்த பலன்களும் கிடைக்கும். வேகமாக அதிகப்படியான கலோரிகளையும் எரிக்க முடியும்.