பின்பக்கம் இருக்கும் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டுமா? சில உடற்பயிற்சிகள் இதோ
தற்போது இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால் அவதிப்படுவதோடு பார்க்கவும் அசிங்கமான தோற்றத்தை அளிக்கின்றனர்.
இதனை ஒரு சில உடற்பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
ரெனிகேட் வரிசை
கீழே ஒரு தரை விரிப்பை விரித்துக் கொண்டு, ஒரு கையை கையில் தம்புள்ஸ் வைத்துக் கொண்டு தரையில் ஊன்றியபடியும் மற்றொரு பக்கத்தின் தோள்பட்டையை பேஸன்ஸ் செய்த படியும் இருக்க வேண்டும். இதில் கால்களை மடக்காமல் நேராக நீட்டி, காலின் முன் பகுதியில் மட்டும் தான் நிற்க வேண்டும்.
இப்படி செய்யும்போது நம்முடைய வயிறு மற்றும் முதுகெலும்பு இறுக்கமடைந்து தசைகள் உறுதியாகும். முகுதுப் பகுதியில் சேர்ந்திருக்கும் தேவையில்லாத கலோரிகளும் கொலஸ்டிராலும் குறையும்.
ஒவ்வொரு கையிலும் 3-5 பவுண்டு அளவுக்கு வெயிட் வைத்திருந்தால் போதும். இதில் கீழே ஊன்றும் கைகளை அவ்வப்போது மாற்றிக் கொள்ளலாம்.
டம்புள் வரிசை
ஒரு முழங்காலை ஒரு பெஞ்ச் அல்லது சோஃபா அல்லது மேசையின் மீது வைத்துக் கொண்டு, ஒரு லேசான (3-5 பவுண்டுகள்) எடையுடன் எதிர் கையில் வைத்து, சற்று முன்னோக்கி வளைந்து நிற்க வேண்டும். இப்போது கையை நேராக பின்னால் இழுக்க வேண்டும். இப்படி செய்யும்போது முதுகுப் பகுதி சுருங்க ஆரம்பிக்கும்.
அப்போது உடல் தசைகள் இறுகி, சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.
இதை செய்யும்போது முழங்கையை நகர்த்தும் போது உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் முழு உடல் எடையும் கைகளில் குவிந்துவிடும். ஒருமுறை 12 முழு செட் செய்து பின்னர் கைகளை மாற்றவும்.
புல்-அப்ஸ்
சிறிது சிறிதாக முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உடலின் முழு பலத்தையும் உள்ளங்கையில் போடுங்கள். அப்போது பயிற்சி செய்வது கொஞ்சம் எளிதாக இருக்கும்.