முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கனுமா? இந்த பயிற்சிகளில் ஒன்றை செய்தாலே போதும்
Exercises
By Kishanthini
பெரும்பாலும் முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது மிக கடினமான ஒன்றாக பலருக்கும் உள்ளது. ஆனால், இதை மிக எளிதான முறையில் நம்மால் குறைக்க முடியும்.
இதற்கு ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- முக பகுதியில் உள்ள கொழுப்பை விரைவாக குறைக்க முதல் வழி வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னுமாக அசை போடுவது தான்.
முன்னும் பின்னுமாக தாடையை அசைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இவற்றில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்கும். தினமும் இந்த பயிற்சியை 8 முதல் 10 முறை செய்து வரலாம்.
- அவ்வப்போது நாக்கால் மூக்கை தொடுவது போல செய்து வந்தால் இந்த கொழுப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இந்த பயிற்சியை விளையாட்டாக 5 முறை செய்து வரலாம்.
- உங்களது கழுத்தை இடது புறமாக திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னுமாக அசைத்து வரவும். இவ்வாறு செய்வதால் முக பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும். அத்துடன் தசைகளும் இறுக்கமாக மாறும். இதை தினமும் 5 முறை செய்து வரலாம்.
- உங்களை விட உயரமாக இருக்கும் ஒருவருக்கு மேல் நோக்கிய படி முத்தம் கொடுப்பது போல தொடர்ந்து 5 முறை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 நொடிகள் அதே நிலையில் இருத்தல் வேண்டும். இது சிறந்த பலனை தரும்.
- உங்களது வாயை குவித்து வைப்பது போல செய்து வந்தால் அருமையான பலனை தரும். அதாவது, தொடர்ந்து 5 நொடிகள் உங்களது வாயை குவித்து வைக்க வேண்டும். இதை தொடர்ந்து 6 முறை ஒரு நாளைக்கு செய்து வரவும்.
-
வாயை நன்றாக திறந்து சிரிக்க வேண்டும். இது தான் ஆறாவது பயிற்சி முறை. இவ்வாறு சிரித்த படி 3 நொடிகள் இருந்தால் போதும். இந்த பயிற்சியை 5-8 முறை செய்து வருவது சிறந்த பலனை தரும்.
-
கன்னத்து பகுதியை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்ற வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்து வரலாம். இதுவும் முகத்தில் உள்ள கொழுப்பு பகுதிகளை குறைக்க கூடிய எளிமையான பயிற்சி முறையாகும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US