தொடை பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்க இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்!
ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். இதனை குறைப்பது மிகவும் கடினமானதாக காணப்படும்.
இதற்கு ஒரு சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் எளிய முறையில் உடல் எடையினை குறைக்க முடியும்.
தற்போது தொடை பகுதியில் சேரும் கொழுப்பை கரைக்கக என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
ஒற்றை கால் பயிற்சி
யோகா விரிப்பில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இரு கால்களையும் மடக்கிய நிலையில் தரையில் ஊன்றிக்கொள்ள வேண்டும்.
பின்பு இடது கால் பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்தி 5-7 வினாடிகள் நேராக வைத்திருந்து பின்பு கீழே தாழ்த்தி இயல்பு நிலைக்கு வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
பின்பு இடது காலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வலது காலை மேலே உயர்த்தி பயிற்சியை தொடர வேண்டும். இவ்வாறு தினமும் 10 முதல் 15 முறை பயிற்சி செய்து வரலாம்.
சாய்ந்த நிலை பயிற்சி
தரை விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு மேல் பகுதியில் இருக்கும் காலை நன்றாக உயரே உயர்த்தி சில விநாடிகள் வைத்திருந்து கீழே இறக்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம்.
இந்த பயிற்சியின் மூலம் தொடை பகுதியில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். கொழுப்பு சேர்ந்திருந்தாலும் கரையத் தொடங்கும்.
இடுப்பு பயிற்சி
தரை விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்பு முழங்கையை தரையில் அழுத்தமாக ஊன்றிவிட்டு இடுப்பையும், ஒரு காலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.
அப்போது கால் பகுதி நேரான நிலையில் இருக்க வேண்டும். சில விநாடி கள் அதே நிலையில் வைத்துவிட்டு இடுப்பை கீழே இறக்கி தரையில் பதியவைத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு தினமும் 15 முறை பயிற்சி செய்து வரலாம்.