தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்!
உடலில் கொழுப்புக்களானது அடிவயிற்றிற்கு அடுத்தபடி தொடையில் தான் அதிகம் தேங்கும். தொடையில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.
தொடையில் தேங்கியுள்ள கொழுப்பை வேகமாக கரைப்பதற்கான சில எளிய இயற்கை வழிகளை உள்ளன.அதிலும் உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதற்கு ஒரு சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து வரலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
ஸ்குவாட்ஸ்
ஸ்குவாட்ஸ் பயிற்சி கால்கள் மற்றும் பின் தொடைப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக்குகிறது. நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. நமது உடலின் கீழ் பகுதிகளை திடகாத்திரமாக வைத்திருக்கிறது.
சுவற்றில் சாய்ந்து சாிதல்
ஒரு நல்ல சுவரை தோ்ந்து கொள்ள வேண்டும். அந்த சுவற்றில் முதுகை சாய்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவற்றில் சாய்ந்தவாறே மெதுவாக தரையை நோக்கி உடலை சாிக்க வேண்டும்.
அதாவது கால்கள் சாியான கோணத்தில் மடங்கும் வரை சாிக்க வேண்டும். இவ்வாறு பலமுறை செய்யலாம். இந்த சுவற்றில் சாய்ந்து சாியும் பயிற்சியானது நமது உடலில் கீழ் உறுப்புகளின் பலத்தை பாிசோதிக்கிறது. மேலும் கால்களின் தசைகளை வலுப்படுத்தி அவற்றை சீா்படுத்துகிறது.
லுங்கெஸ்
லுங்கெஸ் பயிற்சி நமது இடுப்பு, முன் தொடை தசை, பின் தொடை தசை மற்றும் பின் தொடை தசை நாா் போன்றவற்றை வலுப்படுத்துகிறது. லுங்கெஸ் பயிற்சியை செய்வது மிகவும் எளிதானதாகும்.
நமது கீழ் உறுப்புகளை லுங்கெஸ் பயிற்சி நன்றாக வைத்திருக்கும். ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் லுங்கெஸ் பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கால்களை தூக்குதல்
பக்கவாட்டில் கால்களைத் தூக்கும் பயிற்சியைச் செய்யலாம். கால்களைத் தூக்கும் பயிற்சியானது நமது உடலில் உள்ள கீழ் உறுப்புகளுக்கு நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. மேலும் தசைகள் வளா்வதற்கு உதவி செய்கிறது.
கால் முட்டிகளை உயா்த்துதல்
கால் முட்டிகளை உயா்த்தும் பயிற்சி நமது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒன்றாகும். இது உடலில் கீழ் உறுப்புகளில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. கால்களுக்கு இயக்கத்தைக் கொடுக்கிறது.