கொரோனா தோற்றம் குறித்து சீன தொற்றுநோய் நிபுணர் பரபரப்பு தகவல்
கொரோனா தோற்றம் குறித்த அடுத்த கட்ட விசாரணை அமெரிக்காவுக்கு மாற்றப்பட வேண்டும் என சீன தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் இந்த வாரம் வெளியிட்ட ஆய்வு முடிவில், அமெரிக்க தனது முதல் கொரோனா தொற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் 5 மாநிலங்களில் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தோற்றும் குறித்த விசாரணை அமெரிக்க பக்கம் மாற வேண்டும், ஏனெனில் அமெரிக்க பல உயிரியல் ஆய்வகங்களில் இருப்பிடமாகும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் zeng Guang கூறினார்.
மேலும், அமெரிக்காவில் உள்ள அனைத்து உயிரியல் ஆயுதங்கள் தொடர்புடைய விவகாரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.